பத்திரிகையாளர் கொலை ; சவுதிக்கு எதிராக ஜேர்மன் சான்சலரின் அதிரடி முடிவு!

பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியை கொலை செய்த விவகாரத்தில் சவுதி அரசு மீது உலகநாடுகள் அதிருப்தியில் உள்ளனர்.

இளவரசரை விமர்சித்த பத்திரிகையாரை துண்டு துண்டாக வெட்டி காட்டுக்குள் சவுதி அதிகாரிகள் வீசியுள்ளனர்.

இந்த சம்பவத்துக்கு ஜேர்மன் அரசாங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சான்சலர் ஏஞ்சலா மெர்க்கல் கூறியதாவது, நடந்த சம்பவம் குறித்து சவுதி அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.

மேலும், தற்போது இருக்கும் சூழ்நிலையில் சவுதி அரசாங்கத்துக்கு ஏற்றுமதி செய்யப்படும் ஆயுதங்கள் தற்காலிகமாக நிறுதி வைக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவிற்கு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக ஜேர்மனி நான்காவது பெரிய ஆயுதங்களை ஏற்றுமதி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது