வீடெங்கும் தெறித்த ரத்தம்.. இளம்பெண் விவகாரத்தில் நடந்த கொடூர சம்பவம்.!

சென்னை ராயபுரம் செட்டிதோட்டம் பகுதியைசேர்ந்தவர் பிரேம்குமார். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களது 16வயது மகளை பக்கத்து வீட்டில் வசிக்கும் வினோத்குமார் என்பவர் ஈவ்டீசிங் செய்துள்ளார்.

இதுபற்றி ராயபுரம் காவல்நிலையத்தில் புகார்செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் ராஜா வினோத்குமாரை காவல்நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினார்.

அப்போது அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கண்டித்து அனுப்பி வைத்துள்ளார்.

இந்தநிலையில் வேலைக்கு சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பிய பிரேம் குமாருக்கு, மகள் ஈவ்டீசிங் செய்யப்பட்டது பற்றிய தகவல் தெரிந்தது.

இதனால் ஆத்திரம் அடைந்தஅவர் வினோத் குமார் வீட்டுக்கு சென்று தட்டிக்கேட்டார்.அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதுமோதலாக மாறியது. வினோத் குமார் தன் மீது தவறு இருப்பதை மறந்து விட்டு பிரேம்குமாரை சரமாரியாக அடித்து உதைத்துள்ளார்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான பிரேம்குமார் பாரிமுனை பகுதியில் உள்ள தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

அவர்கள் அங்கிருந்து திரண்டு வந்தனர். பின்னர் அனைவரும் வீட்டுக்கு சென்று வினோத்குமாரை கண்டித்தனர்.

இதனால் மீண்டும் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், ரகளையில் ஈடுபட தொடங்கினார். இதுமிகப்பெரிய மோதலாக மாறியது.

வினோத் குமார் தனது வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து பிரேம்குமாரின் உறவினர் களை சரமாரியாக வெட்டினார்.

இதில் அவரது உறவுக்கார பெண் மேரிக்கு கத்திகுத்து விழுந்தது.இதில் அவர் பலத்த காயம் அடைந்தார்.

மேரியின் தங்கை மெர்லின், பிரேம் குமார் ஆகியோர் வினோத் குமாரை தடுத்தனர். இதில் அவர்களுக்கும் கத்திகுத்து விழுந்தது. உடனடியாக மேரி உள்ளிட்ட 3 பேரும் ஸ்டேன்லி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

அங்குசிகிச்சை பலன் அளிக்காமல் மேரி பரிதாபமாக உயிரிழந்தார்.ஈவ்டீசிங் கொடுமைக்குள்ளான பெண்ணின் தாய் பரமேஸ்வரி அளித்த புகாரில் வினோத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் மோதல் சம்பவம் நடந்திருக்காது.

அநியாயமாக அப்பாவிப் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.