மக்களைக் காப்பாற்றச் சென்று பலியான ராவணன்….! நாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….!

மக்களைக் காப்பாற்றச் சென்று பலியான ராவணன்….! நாடகத்தில் வில்லன், நிஜத்தில் ஹீரோ….!

அமிர்தசரசில் நடைபெற்ற தசரா விழாவில், மிக முக்கிய நிகழ்ச்சியான, ராமலீலா நாடகத்தில், ராணவனனாக தல்பீர் சிங், என்பவர் நடித்திருந்தார். ராணவணன் போலவே, கெட்டப்பில், பிரமாதமாக மேக்கப் போட்டு, அசல் ராவணன் தோரணையில் நடித்திருந்தார்.

நாடகம் முடிவடைந்தது. எல்லோரும், தல்பீர் சிங்கின் நடிப்பைப் பாராட்டினர். அந்த நடிப்பிற்காக, வழங்கப்பட இருந்த, பாராட்டுப் பத்திரத்தையும், பரிசையும் பெறுவதற்காக, அவர் காத்திருந்தார்.

அப்போது, ரயில் தண்டவாளத்தில் நின்றிருந்த பலரை ரயில் மோதியதைக் கண்டு துடித்த தன்வீர், மக்களைக் காப்பாற்ற, வேகமாகச் சென்றார். ஆனால், எதிர்பாராத விதமாக அவரது கால் ரயிலில் சிக்கிக் கொண்டது. இதனால், அவரும் அந்த ரயிலில் சிக்கி மரணமடைந்தார்.

இறந்து போன தல்பீர் சிங்கிற்கு, திருமணம் ஆகி விட்டது. எட்டு மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. ராவணனாக நாடகத்தில் நடித்திருந்தாலும், அவர் நிஜத்தில், உண்மையான ஹீரோவாகி விட்டார், என்று அவரது மரணத்தைக் கேள்விப் பட்டவர்கள், கண்ணீர் மல்க கூறினார்கள்.