புதுக்கோட்டை அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலைக்கு ஊர்வல மேடை அமைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த பகுதிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்த எச்.ராஜா இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் காவல் துறையில் மொத்தமும் ஊழல், காவலர்களின் மனதானது 100 சதவிகிதம் அழுகி போய்விட்டது, நான் இங்கு இருக்கும் இந்து வீடு வழியாக போகிறேன்., முடிந்தால் தடுத்துப்பார் என்று கூறினார்.
அதற்கு காவல் அதிகாரி உயர்நீதிமன்ற அனுமதி இல்லாததால் அவ்வாறு செய்ய முடியாது எனக் குறிப்பிடவே., கடும் கோபமடைந்த எச் ராஜா, ”உச்சநீதிமன்றமாவது……….. (ம……….)” என்று கடுமையாக பேசினார். நான் உங்களுக்கு பணம் தருகிறேன் நான் சொல்வதை கேளுங்கள்” என்றும் தமிழக காவல் துறையை விமரிசித்தார்.
இவரின் இந்த அவதூறு பேச்சுக்கு, திருமயம் காவல் நிலையத்தில் எச். ராஜா மீது 143, 188, 294 பி, 353, 153 ஏ,. 505 (1), 506 (1) ஆகிய 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதியபட்டுள்ளது. மேலும் பல காவல் நிலையங்கள் அவர் மீது வழக்கு பதிந்துள்ளது. மேலும், வழக்கறிஞர்கள் சங்கத் துணைத் தலைவர் சுதா அவர்கள், டிஜிபியிடம் எச்.ராஜா மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் மனு அளித்தனர்.
கடந்த 17.09.2018 அன்று உயர்நீதிமன்றத்தை இழிவாக பேசியதற்காக எச்.ராஜா மீது தானாக முன்வந்து விசாரிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர்கள் மூன்று பேர் கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை உயர்நீதிமன்ற நீதிபதி ஏற்க மறுப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றம் எச்.ராஜா மீது தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து எச்.ராஜாவுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது. அதில், ”காவல்துறை, நீதித் துறையை விமர்சித்தது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்றும், 4 வாரத்துக்குள் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்றும், அப்படி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை எனில் அவர் மீது நேரிடையாக வழக்கு பதிவு செய்யப்படும்” என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்து இருந்தது.
இதற்கிடையே, தன் மீது நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க முடியாது என்றும், தன்னை ஆஜராக உத்தரவிட சி.டி செல்வம் அமர்வுக்கு அதிகாரம் இல்லை என்றும், தலைமை நீதிபதி அமர்வுதான் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும்” என்றும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி அமர்வு முன் ஹெச்.ராஜா தரப்பு முறையீடு செய்துள்ளது.
இந்நிலையில், இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜரான எச் ராஜா, சற்றுமுன், ”தான் உணர்ச்சி மிகுதியால் தவறுதலாக பேசிவிட்டதாக தெரிவித்து. தான் பேசியதற்கு மன்னிப்பும் கோரியுள்ளார்.






