நிலைகுலைய வைத்த தசரா ரயில் விபத்து.. பரபரப்பு காட்சிகள்

பஞ்சாப் அமிர்தசரஸில் ரயில் மோதி ஏற்பட்ட விபத்து வீடியோவாக வெளியாகி உள்ளது.

தசரா விழா பஞ்சாப்பில் சோகத்தில் முடிந்து இருக்கிறது. அங்கு விழா கொண்டாடிய மக்கள் மீது ரயில் மோதியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் அருகே உள்ள ஜோரா பதாக் பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. பதான்கோட்டில் இருந்து அமிர்தசரஸ் வந்த ரயில் தண்டவாளத்தில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கிறது.
ரயில் தண்டவாளத்திற்கு அருகே தசரா விழாவிற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அங்கு மக்கள் ராவண வதம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருக்கிறார்கள்.
இதில் ரயில் பாதைக்கு அருகேயே வைத்து ராவண உருவத்தை கொளுத்தி இருக்கிறார்கள். நுற்றுக்கணக்கான மக்கள் அங்கு இருந்துள்ளனர்.
ரயில் தண்டவாளம் அருகே பல நூறு மக்கள் இருந்துள்ளனர். அப்போது அதில் இருந்து வெடிகள் வெடித்ததில் மக்கள் ரயில் பாதையை நோக்கி ஓடியுள்ளார்.
அந்த சமயம் பார்த்து ரயில் சரியாக அந்த இடத்திற்கு வந்துள்ளது. தண்டவாளத்தில் இருந் மக்கள் மீது ரயில் மோதியுள்ளது.
இந்த விபத்தில் 50 பேர் வரை சம்பவ இடத்திலேயே பலியாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுவரை 30 பேர் உடல் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது. மக்கள் வெடிக்கு பயந்து ஓடுவதும், அப்போது ரயில் வருவதும் வீடியோவாக பதிவாகி உள்ளது.