சபரிமலை பக்தர்களின் குமுறல்!. அங்கு செல்லும் பெண்கள் உண்மையிலே அய்யப்பன் பகதர்கள் அல்ல!

கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.

பொதுவாக சபரிமலைக்கு மாலையணிந்த பக்தர்கள் வீட்டில் இருக்கும் போது, வீட்டில் உள்ள பெண்கள் மாதவிடாய் காலங்களில் அவர்களின் உறவினர் வீட்டிற்கு சென்று விடுவார்கள். அந்த அளவிற்கு பக்தியோடு ஐயப்பன் தரிசனம் பெற்று வந்த பக்தர்கள் தற்போது இந்த தீர்ப்பினால் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

பொதுவாக அய்யப்பன் கோவிலுக்கு, பெண்கள் அவர்களே செல்வதற்கு விரும்புவதில்லை, ஏனென்றால் அதனால் ஏற்படும் விளைவுகள் என்னவென்று அவர்களுக்கே தெரியும்.

இந்த நிலையில் ஐயப்பன் பக்தர்கள் இது குறித்து கூறுகையில், தற்போது கண்டிப்பாக அங்கு செல்லும் பெண்கள் தரிசனம் செய்வதற்காக செல்பவர்கள் அல்ல. இது அங்கு செல்லும் பக்தர்களை கஷ்டப் படுத்துவதற்காகவே அவர்கள் இவ்வாறு செய்வதாக தெரிகிறது என கூறுகின்றனர்.

ஏனென்றால் உண்மையான ஐயப்பன் பக்தர்கள் என்றால், எந்த அளவிற்கு சுத்தமாகவும், கண்ணியமாகவும் இருக்க வேண்டும் என்று அனைத்து பக்தர்களுக்கும் தெரிந்த விஷயமே. ஆனால் அங்கு நடக்கும் செயல்களை பார்த்தால் ஏதோ ஒரு அமைப்பினரால் தூண்டுதலின் பெயரிலே அனைத்தும் நடைபெறுகிறது போல் உள்ளது என ஐயப்பன் பக்தர்கள் கூறுகின்றனர்.

மேலும், நாங்கள் இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஐயப்பன் கோவிலின் வரலாறையும், பக்தர்களின் வரலாறையும் எடுத்துப் பார்த்தாலே அவர்களுக்கு தெரியும் ஏன் அங்கு பெண்கள் போக கூடாது என்று.

மேலும் அவர்கள் கூறுகையில், ஐயப்பன் கோவிலுக்கு பெண்கள் செல்ல கண்டிப்பாக தடை விதிக்க வேண்டும் என ஐயப்பன் பக்தர்கள் கோரிக்கை வைக்கின்றனர் இந்த தீர்ப்பை திரும்பப் பெறும் வரை கண்டிப்பாக அனைத்து ஐயப்பன் பக்தர்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என உறுதியாகக் கூறுகின்றனர்.