பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்நிலையில் நடிகைகள் மற்றும் பெண்கள் தனக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகளை தைரியமாக metoo என்ற ஹாஸ்டேக் மூலம் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் திரையுலகமே மிகப்பெரிய மதிப்பும் மரியாதையும் வைத்திருக்கும் கவிஞர் வைரமுத்து மீது சந்தியாமேனன் என்ற பெண் பத்திரிகையாளர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக டுவீட் ஒன்றை வெளியிட்டார்.
அவரை தொடர்ந்து நடிகை சின்மயியும் அவர் மீது பாலியல் குற்றசாட்டை வைத்தார். இதனால் திரையுலகமே பெரும் அதிர்ச்சியில் மூழ்கியது.
இந்நிலையில் வைரமுத்துவின் விக்கிபீடியா பக்கத்தில் சில மர்மநபர்கள் அவரது பெயரை மாற்றி, ”செக்ஸ் டார்ச்சர் வைரமுத்து” என்று வைத்து இருக்கிறார்கள்.
இது சமூகவலைத்தளங்களில் வைரலாகவும், அடுத்த சில மணி நேரத்தில் இந்த பெயர் மீண்டும் சரிசெய்யப்பட்டது. மேலும் சர்ச்சை என்று தனி தலைப்பு தயார் செய்யப்பட்டு அவரைப்பற்றிய பாலியல் புகார்கள் பதிவிடப்பட்டுள்ளது.
சில அரசியல் தலைவர்கள் இவ்வாறு பெயர் மாற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.