வடக்கு அயர்லாந்து நாட்டில், தலைநகர் பெல்பாஸ்ட்டில் பிறந்தவர் அன்னாபர்ன்ஸ். உலகளவில் வழங்கப்படும் இலக்கியத்திற்க்கான விருதான ” மேன் புக்கர் பரிசு ” கடந்த 1969 ம் வருடத்தில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பரிசானது வருடத்திற்கு ஒருமுறை சிறந்த எழுத்தாளருக்கு வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடம் இந்த பரிசினை அன்னாபர்ன்ஸ் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விருதை பெற முக்கிய காரணமாக கடந்த 30 வருடங்களாக வடக்கு அயர்லாந்தில் அரங்கேறிய வன்முறை சம்பவங்களை மையமாக வைத்து அதனை விரிவாக எழுதியதே காரணமாகும். மேலும் இவர் தற்போது இவர் பெற்ற இந்த பரிசானது 50-வது மேன் புக்கர் பரிசு என்பது சிறப்பிற்குரியது.






