ஆன்லைன் மூலம் மது வினியோகம் செய்ய மாநில அரசு திட்டம்!

வீடு தேடி வருகிறது மதுபானம்! ஆன்லைன் மூலம் மது வினியோகம் செய்ய மாநில அரசு திட்டம்!

மகாராஷ்டிராவில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதால், அதிகளவு விபத்துகள் ஏற்படுகிறது. பொதுமக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில், ஆன்லைனில் மதுபானங்களை வீடுகளுக்கு நேரடியாக விற்பனை செய்ய அனுமதி அளிக்க மராட்டிய அரசு முடிவு செய்துள்ளது.

இது குறித்து மாநில கலால் வரித்துறை மந்திரி சந்திரசேகர் பவன்குலே கூறியவை, பொதுமக்கள் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்கும் வகையில், மதுபானங்கள் வீடுகளுக்கு வினியோகம் செய்யப்பட்டால் அது மது அரிந்துபவருக்கு உதவியாக இருக்கும் என்றார். எனினும் அவர் இந்த திட்டம் எப்போது அமலுக்கு வரும் என்பது குறித்து கூறவில்லை.

இது குறித்து கலால் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறியவை, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து மாநிலத்தில் நெடுஞ்சாலையோரம் இருந்த சுமார் 3 ஆயிரம் மதுக்கடைகள் மூடப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.15 ஆயிரத்து 343 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.