தமிழன் வீரமானவன் மட்டும் இல்லை பாசத்தில் அவனை மிஞ்சஉலகில் வேறு ஒரு இனம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். காதலும், வீரமும் தமிழனுக்கே உள்ள பெருமை.
அந்த காலம் முதல் இந்த காலம் வரை கணவன்-மனைவி உறவை புனிதமாக இம்மண்ணில் வாழும் தமிழனும், தமிழச்சிகளும் கடைபிடித்து வருகின்றனர். தான் நேசித்த பெண் கேட்டாள் தன் உயிரையும் துச்சமென கொடுக்கும் காதல்கள் இன்றளவும் இந்த மண்ணில் உள்ளது.
தன் இன்னொரு உயிராக வாழ்ந்த மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்றால், கணவனுக்கு இரண்டு கைகளும் உடைந்தது போல் உடைந்து போவார்கள். வயதான காலத்தில் தன் மனைவி இறந்த பின் இனி நமக்கு யார் இருக்கிறார்கள் என்று எண்ணிய ஒரு கணவன் தன் உயிரை மரித்துக்கொண்ட சம்பவம் நெஞ்சை நெகிழ செய்துள்ளது.
மதுரை மாவட்டம், செல்லம்பட்டி கிராமத்தின் கிழக்கு தெருவைச் சேர்ந்தவர் அம்சமுத்து. இவருக்கு வயது 56. கடந்த ஒன்றாம் தேதி அம்சமுத்துவின் மனைவி இறந்துவிட்டார். இதனால் சோகத்தில் மூழ்கிய அம்சமுத்து யாருடனும் பேசாமல் கண்ணீருடன் அழுதப்படி இருந்தார்.
மேலும் தனக்கு இனி யாரும் இல்லை என்று வாழ்க்கையில் விரக்தி அடைந்த அம்சமுத்து வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக அம்சமுத்துவின் சகோதரர் பரமேஸ்வரன் செக்கானூரணி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.






