சினிமா பிரபலம் மீது பொய்யாக பாலியல் புகார் கூறிய இலங்கை பெண்: சின்மயி

பிரபல நடன இயக்குனர் கல்யாண் மீது இலங்கை பெண் பாலியல் புகார் கூறிய நிலையில் அது விளையாட்டாக கூறப்பட்டது என சின்மயி தெரிவித்துள்ளார்.

பெண்கள் பலர் அனுபவித்த பாலியல் தொல்லை குறித்து அவர்கள் எழுதிய பதிவுகளை பாடகி சின்மயி டுவிட்டரில் ஷேர் செய்து வருகிறார்.

இதில் பிரபல தமிழ் திரைப்பட நடன இயக்குனர் கல்யாண், தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக இலங்கையை சேர்ந்த பெண் கூறியிருந்தார்.

அதாவது சென்னை வந்து கல்யாணிடம் நடனம் கற்றபோது அவர் அப்படி செய்ததாக கூறினார்.

இதை சின்மயி டுவிட்டரில் ஷேர் செய்த நிலையில் தற்போது அதை மறுத்து ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், விளையாட்டாக கல்யாண் மாஸ்டர் மீது பழி சுமத்தப்பட்டுள்ளது.

இப்படி பிரபலங்களை கலங்கப்படுத்துவது நியாயமில்லை.

இதற்கு யாரும் ஆதரவு தராதீர்கள் மற்றும் நம்பாதீர்கள் என பதிவிட்டுள்ளார்.