என் பெயரில் வரும் டுவீட்களை நம்பாதீர்கள்: சின்மயி

தனது டுவிட்டர் ஐடி பெயரில் போட்டோ ஷாப் செய்யப்பட்ட டுவீட்களை நம்பவேண்டாம் என சின்மயி கேட்டு கொண்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறி பரபரப்பை கிளப்பினார் பாடகி சின்மயி.

இதையடுத்து பல பெண்களும் தாங்கள் பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட விடயத்தை சின்மயியிடம் கூறிய நிலையில் அவர்களின் பதிவை சின்மயி டுவிட்டரில் ஷேர் செய்து வருகிறார்.

இந்த பாலியல் புகாரில் பாடகர் கார்த்திக், இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்கா போன்ற பல பிரபலங்கள் சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் சின்மயி டுவிட்டர் ஐடி பெயரில் போட்டோ ஷாப் செய்யப்பட்ட பொய்யான டுவீட்களும் உலா வருகின்றன.

இது குறித்து அவர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், என் பெயரில் போட்டோ ஷாப் செய்யப்பட்ட டுவீட்கள் உலா வருகின்றன.

தயவுசெய்து அதை நம்பாதீர்கள் மற்றும் பகிராதீர்கள் என தெரிவித்துள்ளார்.