அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய இளைஞர் ஒருவர் விசித்திர நோயால் நீண்ட 15 மாதங்களாக அந்த நாட்டிலேயே தத்தளிக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியரான ரியான் வைன் மூன்று வார கால சுற்றுலாவுக்காக அமெரிக்கா சென்றுள்ளார். ஆனால் திடீரென்று நோய்வாய்ப்பட்ட இளைஞர் ரியான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அதன் பின்னர் விமானத்தில் ஏறினால் அவருக்கு மாரடைப்பு ஏற்படும் ஆபத்து உருவானதாக கூறப்பட்டது. விமானத்தில் கூட்டமாக ஆட்களை காண நேர்ந்தால் தமது இதயம் அதிவேகமாக துடிப்பதாக கூறிய ரியான், இதனால் கடந்த 15 மாதமாக சொந்த நாடு திரும்ப முடியாமல் தத்தளித்து வருகிறார்.
மருத்துவமனை தேவைகளுக்காக அவரது சேமிப்பு தொகை 12,000 பவுண்ட்ஸ் செலவான நிலையில் மேலும் 11,500 பவுண்ட்ஸ் கடனாக பெற்றுள்ளார்.
கடந்த ஜூன் 30 ஆம் திகதி நண்பரின் மகளுடன் அறிவியல் கண்காட்சி காண சென்ற ரியான், அங்கே நண்பரின் மகளை கூட்டத்தில் தொலைத்துள்ளார்.
இந்த அதிர்ச்சியில் முதன் முறையாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது,தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 6 மணி நேர தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்ட ரியானை விமானத்தில் அனுமதிக்க முடியாதவர்கள் பட்டியலில் சேர்த்துள்ளனர்.
இதனிடையே நியூயார்க்கில் அமைந்துள்ள பிரித்தானிய தூதரகத்தையும் ரியான் அணுகியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர்களால் உதவி செய்ய முடியாத நிலை இருப்பதாக தெரிவித்துள்ளனர்.






