சிறையிலிருந்து வரும் உத்தரவுகள்.. அதிமுகவை சில்லு சில்லாய் சிதைக்கும் ‘பகீர்’ திட்டம்.!

காளைகள் கூட்டமாக இருந்தால் சிங்கத்தையே கொம்பில் குத்தி தூக்கி எறிந்து விடும். அதே காளை தனியாக மாட்டிக்கொண்டால் எவ்வளவு வலிமையான கொம்பு இருந்தாலும் சிங்கத்தின் கடியில் சிக்கி அதற்கு இரையாகி விடும்.

இதே தந்திர பாணியை தான் இப்போது தினகரன் கையிலெடுத்திருக்கிறார். அதிமுகவில் இரு அணிகள் இணைந்த பிறகு பெரிய அளவில் எந்த கருத்து வேறுபாடும் இல்லாமல், எடப்பாடி பழனிச்சாமி தலைமையின் கீழ் அதிமுக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களாக தினகரனால் கட்சிக்குள் புகைச்சல் எழுந்துள்ளது.

முதலில் பன்னீர்செல்வம் மட்டுமே தன்னை வந்து சந்தித்ததாக கூறி வந்த தினகரன், தான் நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பொழுது சுகாதாரதுறை அமைச்சர் விஜயபாஸ்கரும் தன்னை வந்து சந்தித்ததாக கூறியுள்ளார்.

இதற்கிடையில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர் அதிமுக அமைச்சர் ஒரு பெண்ணை ஏமாற்றியது தொடர்பாக ஆடியோ வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

இப்படி அதிமுக அமைச்சர்களுக்கு எதிராகவும், முக்கிய நிர்வாகிகளுக்கு எதிராகவும் ஆதாரங்களை திரட்டி வைத்துக்கொண்டு தினகரன் களமிறங்கியுள்ளதால், கட்சிக்குள் ஒருவருக்கு ஒருவர் மனக்கசப்பு ஏற்ப்பட்டுள்ளது.

இந்த சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு கணிசமான் அதிமுக தொண்டர்களை தன் பக்கம் ஈர்க்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் தினகரன். இதற்கு சசிகலாவும் பச்சைக்கொடி கட்டிவிட்டதாக சொல்லப்படுகிறது.