பயப்புடுவது அதிமுக மட்டும் இல்லை., திமுகவும் தான்.!! – தினகரன்

தமிழகத்தில் இடைத்தேர்தல் நடக்க உள்ள திருப்பரங்குன்றம் திருவாரூர் தொகுதியில் அதிமுக திமுக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை தற்போதிலிருந்தே தொடங்கி உள்ளன.

இந்த இரண்டு தொகுதிகளிலும் அதிமுக, திமுக உள்ளிட்ட காட்சிகள் பூத் கமிட்டி ஆட்களை நியமிப்பது குறித்தும் எப்படி வெற்றி பெறுவது என்றும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

இந்நிலையில், நேற்று முன் தினம் இந்திய தலைமை தேர்தல் அதிகாரி, 5 மாநில மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை அறிவித்து இருந்தார். அப்போது, தமிழகத்தில் காலியாக உள்ள திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்த தேதி அறிவிக்கப்படும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை விடுத்துள்ள காரணத்தினால், தற்போது தமிழகத்தில் இடைத்தேர்தல் நடத்த இயலாது என்று இந்திய தலைமை தேர்தல் அதிகாரி கைவிரித்தார்.

இந்நிலையில், இடைத்தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு வியப்பளிப்பதாகவும், தேர்தலை கண்டு திமுக பயப்படுகிறது என்றும் இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

மேலும், நாட்டில் ஜனநாயக ஆட்சி நடக்கிறதா இல்லை, அதிபர் ஆட்சி நடக்கிறதா என்று தெரியவில்லை. தற்போதைய இந்த அரசு மக்களுக்கு எந்த நன்மையையும் செய்யவில்லை என்றும் தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.