பூனையால் உயிர் தப்பிய குடும்பம்.!

கடந்த சில தினங்களாவே தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமானமழையும் பெய்து வருகிறது. அந்த வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

வத்தலகுண்டு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிராமத்தில் ஒன்றை மேலக்கோவில்பட்டியில் வசித்து வருபவர் கோவிந்தன். இவரின் மனைவியின் பெயர் ராஜாத்தி., இவர்கள் இருவருக்கும் ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர்கள் இருவரும் நேற்று இரவு வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தனர். இவர்கள் வீட்டில் பூனை ஒன்றை செல்ல பிராணியாக வளர்த்து வந்தனர்.

அதிகாலை சுமார் 5 மணியளவில் இவைகளின் செல்லப்பிராணி வழக்கத்தை விட மாறாக சத்தம் போட்டதால் வீட்டில் உள்ள அனைவரும் பதறியபடி எழுந்து வீட்டை விட்டு வெளியே சென்றனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக வீட்டில் இருந்து நால்வரும் சரியாக வெளியே வந்த நேரத்தில் ஒரு நொடியில் வீடானது இடிந்து தரைமட்டமானது.

இதனால் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இவர்களை வெளியே அழைத்த பூனையை கட்டிப்பிடித்து அனைவரும் கண்கலங்கினார். வீட்டில் வளர்த்த செல்ல பிராணியால் தங்கள் உயிரானது தப்பியது என்று அந்த குடும்பத்தார்கள் ஆனந்த கண்ணீருடன் தெரிவித்தனர்.

பூனை, நாய் போன்ற விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படும் சில நிமிடங்களுக்கு முன்னதாகவே ஏற்படும் சமிக்கைகளை வைத்து வரப்போகும் ஆபத்தை உணரும் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே., இவர்களின் அதிர்ஷ்டம் செல்லப்பிராணி பூனையால் நால்வரும் காப்பாற்றபட்டது இறைவன் செயல் என்று அந்த பகுதி வாசிகள் தெரிவித்தனர்.