ஒரு பெண்ணுக்காக, இரண்டு தாசில்தார்கள்….!

ஒரு பெண்ணுக்காக, இரண்டு தாசில்தார்கள் சேர்ந்து, அந்தப் பெண்ணை விரும்பிய மூன்றாவது நபரைத் தாக்கிய அவலம்….!

தமிழகத்தில் கள்ளிப் பாலுக்குப் பெயர் போன ஊரில், இருந்த தாலுகா அலுவலகத்தில், ஒரு பெண், இ சேவை மையத்தில் வேலை பார்த்து வந்தார். ஏழையானாலும், அந்தப் பெண், அழகாக இருந்தார். குடும்பப் பிரச்சினை காரணமாக, கணவனிடமிருந்து பிரிந்து, 10 வயது பெண் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

இவர் மீது, இதே அலுவலகத்தில் ரெகுலர் தாசில்தாராக இருந்த ரவி என்பவருக்கு, ஒரு கண். அதற்கு, அலுவலக உதவியாளர் துாதாக இருந்து, இந்த இருவரையும், தனிமையில் சந்திக்க வைத்து, அவர்களுக்காக, அலுவலகத்தின் மாடியிலேயே, உள்ள அலுவலக அறையைப் பயன் படுத்த துணை இருந்தார். கொடைக்கானலுக்கு எல்லாம் ஹனிமூன் போனது இந்த ஜோடி.

பின், இந்த தாசில்தார், மாற்றலாகிச் சென்று விட்டார். அவரை அடுத்து, ராமச்சந்திரன் என்பவர் வந்துள்ளார். அவருக்கும், இந்தப் பெண்ணை அறிமுகம் செய்து வைத்தார், அலுவலக உதவியாளர். பின், இவரும், அந்தப் பெண்ணுடன் சேர்ந்து உல்லாசமாக சுற்றித் திரிந்தார். பின், இவரும் மாறுதலாகி வேறு ஊருக்குச் சென்று விட்டார்.

இந்த நிலையில், அந்தப் பெண்ணின் உறவுக்காரரான சண்முகம் என்பவர், அந்தப் பெண்ணிடம் பேசி, “இனி நீ யாரோடும் பேசக் கூடாது. நான் உன்னைக் கவனித்துக் கொள்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

பழைய இரண்டு தாசில்தார்கள், வெளியூரில் இருந்தாலும், தொடர்ந்து போன் மூலம் அந்தப் பெண்ணிடம் பேச முயற்சித்த போது, அதற்கு தடையாக சண்முகம் இருக்கிறார், என்ற விபரம் தெரிய வந்தது.

அதனால், இரண்டு தாசில்தார்களும் சேர்ந்து, கள்ளிப்பால் ஊருக்கு வந்து, சண்முகத்தை வரவழைத்து, வி.ஏ.ஓ. அலுவலகத்தில் வைத்தே, சண்முகத்தைத் தாக்கி உள்ளனர். இதனால் படுகாயம் அடைந்த, அவர் அரசு மருத்துவமனையில், உள் நோயாளியாக அனுமதிக்கப் பட்டார்.

இந்த விவகாரம், போலீசுக்கு தெரியக் கூடாது, என்பதற்காக, பணத்தைக் கொடுத்து அமுக்கி விட்டார்கள்.

இப்படி, ஒரு பெண்ணுக்காக, இரண்டு தாசில்தார்கள், சேர்ந்து ஒருவரைத் தாக்கிய விவகாரம், அங்கே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.