யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவர் திடீரென ஏற்பட்ட உடல் நடுக்கம் காரணமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் தென்மராட்சி சரசாலை வடக்கில் நேற்று இடம்பெற்றுள்ளது.
நேற்றுக் காலை முற்றத்தினை துப்பரவு செய்ததன் பின்னர் குளித்துவிட்டு வந்த அவர் காலை உணவு அருந்தியுள்ளார். அப்போது அவருக்கு உடல் நடுக்கம் ஏற்பட்டுள்ளது.அதன்பின்னர் அவர் படுக்கச் சென்றார். அவர் அசைவின்றி காணப்பட்டதால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
எனினும், அவர் உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் 36 வயதுடையவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நலமாக இருந்த பெண் திடீரென உயிரிழந்தமை அந்தப் பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.