கன்னியாகுமரி மாவட்டம் கீரிப்பாறை அருகே உள்ளது ஒரு மலைக்கிராமத்தில் வசித்து வந்த 18 வயது நிரம்பிய இளம்பெண்ணுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அந்த பெண்ணின் குடும்பத்தார்கள் மற்றும் உறவினர்கள் அப்பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
மருத்துவமனையில் இளம்பெண்ணாய் பரிசோதித்த மருத்துவர் இந்த பெண்ணின் கணவர் வந்து இருக்கிறாரா என கேட்டார். திருமணமாகாத பெண்ணை இவ்வாறு கூறுகிறாரே என உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து அந்த இளம்பெண் 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்று மருத்துவர் உறவினர்களிடம் கூறினார். இளம்பெண்ணுக்கு இன்னும் திருமணம் அகதா நிலையில் மருத்துவர் அவ்வாறு கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அந்த பெண்ணுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என மருத்துவருக்கு உறவினர்கள் தெரிவித்தனர், அது ஒரு அரசு மருத்துவமனை என்பதால் மருத்துவர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவலறிந்த கீரிப்பாறை போலீசார் அந்தப் பெண்ணிடம் மேற்கொண்ட விசாரணையில் அந்தப் பெண் தனது கற்பத்துக்கு காரணம் ஒரு பத்தாம் வகுப்பு மாணவன் என்று கூறினார்.






