சபாஷ்…..! கட்டப் பஞ்சாயத்து செய்து, மிரட்டி பணம் பறித்த 3 பேர் வக்கீலாக பணியாற்ற தடை விதித்தது நீதி மன்றம்….!
திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் ஜவுளிக்கடை வைத்திருந்த கார்த்திக் என்பவர், தன்னிடம், வக்கீல் பாலசுப்ரமணியன் என்பவர், கடை நடத்த வேண்டும், என்றால், எனக்குப் பணம் தர வேண்டும், என்று மிரட்டி, இது வரை 5 லட்ச ரூபாய் வரை, அவரிடம் அடாவடியாக பணம் வசூல் செய்துள்ளார்.
இதனால், கார்த்திக் மதுரை ஐ கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதி மன்றம், பாலசுப்ரமணியன் மற்றும் அவருக்குத் துணையாக இருந்த சரவணக்குமார், சுப்ரமணி ஆகியோரை, சென்னை எல்லைக்குள் இருக்கும் எந்த நீதி மன்றத்திலும், வக்கீலாகப் பணியாற்றத் தடை விதித்தது.
வக்கீல் பாலசுப்ரமணியத்தின் மேல், ஏற்கனவே, ஏகப்பட்ட புகார்கள் உள்ளன. அதனால், கடந்த 2016-ஆம் ஆண்டு முதல், அவர் பெயர் பார் கவுன்சில் இருந்து நீக்கப் பட்டுள்ளது.
இந்த மாதிரியான வக்கீல்களினால், நீதிக்கே கலங்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, இம்மாதிரியான வக்கீல்கள் முதலில் மனிதர்களாக நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும், கார்த்திக்கின் கடையை அவரிடமே ஒப்படைக்க வேண்டும். என்று நீதி மனற்ம் தீர்ப்பளித்துள்ளது.
நீதி மன்றத்தின் இந்த தீர்ப்பை எல்லோரும் பாராட்டினர்.