வாட்ஸ் ஆப் சாட்டிங் மூலம் காதலித்து வந்த இருவர், சேர முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் செகந்திராபாத் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். 27 வயது நிறைந்த அவர் அதே பகுதியை சேர்ந்த வெண்ணிலா என்ற 19 வயது பெண்ணை வாட்ஸ் ஆப் மூலம் சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த மாதம் சிவகுமார்க்கு விருப்பமில்லாமல் குடும்பத்தினரின் வற்புறுத்தலால் சிவகுமாருக்கு, லஹாரி என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மேலும் திருமணம் ஆகியும் சிவகுமார் தன் காதலியுடன் வாட்ஸ் ஆப் மூலம் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறார்.
இவர்களது சாட்டிங்களை எதிர்பாராத விதமாக பார்த்த லஹாரி சிவகுமாரிடம் உடனே இந்தக் காதலை நிறுத்திக்கொள்ளுங்கள் இல்லையென்றால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் இதைப் பற்றி கூறிவிடுவேன் என லஹாரியை மிரட்டி இருக்கிறார்.
இதனால் பயத்தில் மனம் உடைந்த சிவகுமார் அவர் அறையில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். சிவாவின் தற்கொலையால் அதிர்ச்சி அடைந்த வெண்ணிலா துக்கம் தாங்காமல் நேற்று ஆசிட் குடித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.