அதிமுகவோடு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் நெருங்கி வருவதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை தங்கசாலையில் அமைந்துள்ள சென்னையில் முன்னாள் மேயர் சிவராஜின் 127ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது உருவப்படத்திற்கு தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், சென்னையில் நாளை நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் 5 லட்சம் முதல் 7 லட்சம் பேர் வரை உறுதியாக கலந்து கொள்வார்கள் என கூறினார்கள். .
விழா அழைப்பிதழ் அனைவருக்கும் பாகுபாடின்றி அனுப்பப்பட்டுள்ளதாக ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும் அழைத்தால் தானும் பங்கேற்பேன் என தொல்.திருமாவளவன் கூறியிருப்பதை சுட்டிக்காட்டிய ஜெயக்குமார் இதன் மூலம் திருமாவளவன் எங்கள் பக்கம் நெருங்கி வருவதையே இது காட்டுவதாகக் கூறினார்.
2016 மக்கள் நல கூட்டணி படுதோல்விக்கு பிறகு திமுகவே கதி என திருமாவளவன் இருக்கிறார். அமைச்சர் ஜெயக்குமார் சென்ற பிறகு அதே இடத்திற்கு அஞ்சலி செலுத்த வந்த திருமாவளவன் நான் எம் ஜி ஆர் மீது கொண்ட நல்மதிப்பினாலும், நல்ல தலைவர் எனபதால் தான் அவ்வாறு கூறியதாக தெரிவித்துள்ளார். திமுகவை விட்டு நகரும் எண்ணம் இல்லை என்பதை திருமாவளவன் தெரிவித்துள்ளார். ஆனால் திமுகவோடு விசிக இருக்கிறது என இதுவரை திமுக தரப்பில் யாருமே கூறவில்லை எனபது குறிப்பிடத்தக்கது.






