விருதுநகர் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் கேபிள் டி.வி இணைப்புகள் உள்ளன.
அதில் சன் டி.வி, விஜய் டிவி, ஜீ தமிழ் உள்ளிட்ட பல்வேறு சேனல்கள் ஒளிபரப்பாகின. இந்நிலையில்,திடீரென அந்த சேனல்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டன.
இதனால், குடியிருப்புகளில் உள்ள பெண்கள் கேபிள்டி.வி ஆபரேட்டர்களிடம் புகார் தெரிவித்தனர்.
செட் டாப் பாக்ஸ் பொருத்துங்கள். அதற்கு ரூ.500 பணம் தர வேண்டும் என ஆபரேட்டர்கள் நிர்ப்பந்தம் செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பொது மக்கள், ஏற்கனவே, செட் டாப் பாக்ஸ் பொருத்தப்பட்ட வீடுகளில் விரும்பிய சேனல்கள் வரவில்லை.
மேலும், சேனல்களை திடீரென நிறுத்தி நிர்ப்பந்தம் செய்வது எந்த வகையில் நியாயம் என எதிர்க் கேள்வி எழுப்பினர்.
ஆனால், கேபிள் டி.வி ஆபரேட்டர்கள் நீங்கள் எங்கு வேண்டுமானலும் சொல்லுங்கள் என பதில் கூறி வருகிறார்களாம்.
இதுகுறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானத்திடம் புகார் மனு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதன் பிறகும் பொதுமக்கள் விரும்பிய சேனல்கள் ஒளி பரப்பாகா விட்டால் போராட்டம்நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.






