மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுக சாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதில் இதுவரை 100 சாட்சிகள் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளனர். இன்னும் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.
இதுவரை விசாரணை நடத்தப்பட்ட சாட்சிகளில் இன்னும் 26 பேரிடம் குறுக்கு விசாரணை நடத்த வேண்டியுள்ளது. அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், ஓட்டுநர்கள் உள்பட 15 பேரிடம் நேற்றும் குறுக்கு விசாரணை நடந்தது.
இந்நிலையில் இன்று அப்பலோவில் ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பலோ மருத்துவர் செந்தில்குமார் ஆஜரானார், அவர் சொன்ன வாக்குமூலத்தில், ஜெயலலிதா, அனுமதிக்கப்பட்டு சிறிது நேரத்தில் கண் விழித்த அவர் தனது உடல்நிலை குறித்து மக்களுக்கு தகவல் தெரிவிக்கவும், ஆனால் அச்சப்படும் விதத்தில் தெரிவிக்க வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டார் என அதில் கூறியுள்ளார். மேலும் அவரது விருப்பப்படி தான் அன்று மருத்துவ அறிக்கைகள் கொடுக்கப்பட்டது எனவும் மருத்துவர் செந்தில்குமார் கூறியுள்ளார்.






