அரசின் முகத்திரையை கிழித்த உயர்நீதிமன்றம்.!!

கடந்த சில நாட்களாகவே அறிவிக்கப்படாத மின்வெட்டால் தமிழகத்தில் உள்ள பொது மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். தலைநகர் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்தடை ஏற்பட்டு வருகிறது.

இப்படியாக திடீரென மின்தடை ஏற்படுவதால் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இருக்க வேண்டியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் தமிழகத்தில் அறிவிக்கப்படாத மிதடை நிலவுவதாக தமிழக அரசு மீது திமுக குற்றம்சாட்டிவருகிறது.

இந்நிலையில், இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஸ்பின்னிங் மில் சங்கம் தாக்கல் செய்த வழக்கு விசாரணைக்கு வந்தது, அப்போது, ”தமிழகத்தில் மின்பற்றாக்குறை உள்ளதா?., அனல் மின்நிலையங்களில் நிலக்கரி பற்றாக்குறை உள்ளதா?., காற்றாலை மின்சாரத்தை முழுமையாக பயன்படுத்தாதது ஏன்?.,” என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், இது குறித்து மின்பகிர்மான கழகத்தின் செயலாளர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மின்தடை உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவந்த வேளையில், தமிழக அரசு தமிழகம் மின்மிகை மாநிலமாக உள்ளது என்று தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ”தமிழகத்தில் மின்பற்றாக்குறை உள்ளதா?” என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.