தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் திடீரென்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்த, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, திடீரென நேற்று இரவு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

தி.மு.க செயல் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின், கருணாநிதியின் மறைவை அடுத்து தி.மு.க தலைவராக பதவியேற்றார். இதனையடுத்து, கடந்த ஒருவருட காலமாக தொடர் பிரச்சாரங்கள் மற்றும் கட்சிப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார் மு.க.ஸ்டாலின்.

சிறுநீரகத் தொற்றுக்கான வழக்கமான பரிசோதனைக்காக அப்போலோ மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் கூறுகின்றனர். வழக்கமான சிகிச்சைக்கு பின்னர் அவர் காலையில் வீடு திரும்புவார் என தெரிவித்தனர்.