விஷம் கொடுத்து மகள்களை கொன்ற தந்தை, வெளியான அதிரவைக்கும் உண்மைகள் .!

பர்கூர் மலைப்பகுதியில் தந்தை ஒருவர் தனது 2 குழந்தைகளுக்கும் வி‌ஷம் கொடுத்து கொலை செய்துவிட்டு, தானும் விஷமருந்தி தற்கொலை செய்துகொள்ள முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பர்கூர் மலைப்பகுதியில் உள்ள செங்குளம் கிராமத்தில் வசித்து வருபவர் சிக்கரசன் .40 வயதான அவர் கூலி தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா. இவர்களுக்கு சுதா,மேகலா என ௨ பெண்குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் சிக்கரசனுக்கும் சித்ராவிற்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். மேலும் சுதாவும், மேகலாவும் தந்தையுடன் வசித்து வந்தனர்.

இந்நிலையில் சிக்கரசனின் உடல்நிலை மோசமாகி தீராத நோயால் அவதிப்பட்டு வந்தார்.
இந்நிலையில் தான் இறந்துவிட்டால் தன்னுடைய மகள்களை யாரும் கவனித்து கொள்ளமாட்டார்கள்,அவர்கள் கஷ்டப்படுவார்கள் என எண்ணிய சிக்கரசன் தனது இரு மகள்களையும் கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளான்.

அப்போது மகள்கள் 2 பேரும் சிக்கரசனிடம் பசிக்கிறது என்று கூறியுள்ளனர். இதைத்தொடர்ந்து அவர்களுக்கு சாப்பாடு வாங்க சென்ற சிக்கரசன் உணவில் வி‌ஷத்தை கலந்துள்ளார், பின் அதனை தன்னுடைய குழந்தைகள் சுதா மற்றும் மேகலாவுக்கு கொடுத்துள்ளார்.

பின்னர் சிக்கரசனும் வி‌ஷம் குடித்துள்ளார். பின்னார் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் 3 பேரும் மயங்கி கீழே விழுந்தனர்.

பின்னர் அக்கபக்கத்தினர் 3 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுதாவும், மேகலாவும் உயிரிழந்தனர். சிக்கரசன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.