தோனியால் நிகழப்போகும் மாற்றம்..? அறிவாற்றலை கண்டு எடுக்கப்பட்ட முடிவு.!

துபாயில் நடைபெற்ற ஆசியக்கோப்பைத் தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்றைய போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின.

இதில் முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி இறுதியாக 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 237 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் சாஹல், யாதவ், பும்ரா தலா 2 விக்கெட்களை கைப்பற்றினர்.

238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித், தவான் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 20 ஓவர்கள் முடிந்த நிலையில் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தனர்.

இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 210 ரன்கள் எடுத்த நிலையில் சதம் அடித்த தவான் 114 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

மற்றொரு துவக்க வீரரான ரோகித் 111 ஓட்டங்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றியை பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இந்திய அணி 39.3 ஓவரில் 1 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதில் பாகிஸ்தான் அணி முதலில் பேட் செய்து கொண்டிருந்த பொழுது, முதல் 7 ஓவரில் பாகிஸ்தான் விக்கெட்டை இழக்கவில்லை.

8-வது ஓவரை சாஹல் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை இமாம் உல் ஹக் முன்னாள் வந்து தடுத்து ஆட முயன்றார்.

அப்போது பந்து பேடை தாக்கியது. மிக அதிக தூரம் முன்னாள் வந்து ஆடியதால் பந்து ஸ்டம்பிற்கு மேல் சென்று விடுமோ? என்ற சந்தேகம் சாஹலுக்கும் ரோகித் சர்மாவிற்கும் இருந்தது.

ஆனால் டோனி எதையும் பற்றி யோசிக்காமல் டிஆர்எஸ் கேட்க ரோகித் சர்மாவிற்கு சிக்னல் கொடுத்தார்.

முக்கியமான நபரிடம் இருந்து சிக்னல் வந்ததும் யோசிக்காமல் ரோகித் சர்மா ரிவியூ கேட்டார். அதில் எந்தவித சந்தேகமும் இல்லாம் இமாம் உல் ஹக் அவுட் என்பது தெரியவந்தது.

தோனி ரிவியூ ஆப்சனை கேட்க சொன்னால், கட்டாயம் அது அவுட்டாகத்தான் இருக்கும். டிஆர்எஸ் முறையில் டிஆர்எஸ் என்றாலே டோனி ரிவியூ சி்ஸ்டம்தான் என்று பாராட்டி வருகின்றனர்.