ஈழத்தமிழர்களின்வரலாறு தெரிந்து தமிழிசை சவுந்தரராஜன் பேச வேண்டும் எனதிமுகவின் செய்தித் தொடர்பாளர் கூறிய கருத்துக்கு இன்று தமிழக பா.ஜ.க தலைவர் இன்றுபதிலறிக்கை வெளியிட்டுள்ளார்.
தமிழிசை வரலாறுதெரிந்து பேச வேண்டுமென திமுக செய்தித் தொடர்பாளர் கூறியதால் வரலாற்றை திரும்பி பார்த்தேன்என ஆரம்பிக்கும் அந்த அறிக்கையில் திமுகவை நோக்கி சில வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன.அதேபோல சில முக்கிய விடயங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
1. பதவிக்காக கச்சத்தீவைஇலங்கைக்கு தாரை வார்த்த திமுக வரலாறு குறித்து பேசலாமா?
2. 1991-ல் ராஜிவ்காந்தியின் மறைவுக்கு பின் அன்றைய மத்திய அமைச்சர் சுபோத் காந்த் சஹாயிடம் தான் என்றும்விடுதலைப் புலிகளை ஆதரித்ததே இல்லை, உண்மையான விடுதலைப் புலி ஆதரவாளர் நானில்லை, ஜெயலலிதாதான்என்று மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தன் அரசை கலைக்கக் கூடாது என்று மன்றாடி கேட்டுகொண்டது உண்மையா, இல்லையா?
3. இலங்கையில் பலதமிழர்களைக் புலிகள் கொன்றதால் புலிகள் என்றாலேபுளித்துப் போய்விட்டது என அன்றைய முதல்வர் கருணாநிதி கூறியது உண்மையா இல்லையா?
4. தமிழீழம் இனிச்சாத்தியமானது அல்ல. சம உரிமையும் சம அதிகாரமும் கொடுக்குமாறு சிங்களவர்களிடம் கோரவேண்டும்என்று திமுக தலைவர் சொன்னது உண்மையா, இல்லையா?
5. சிங்களவர்களுடையகோபத்தை அதிகமாக ஆக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் எனக்கூறிய திமுக தலைவரின் வரலாற்றைமறந்து விட்டீர்களா? மறைத்து விட்டீர்களா?
6. ஸ்டாலினுக்குவிடுதலை புலிகளால் ஆபத்து உள்ளது என்றும் அதனால் அவருக்கு மத்திய அரசின் பாதுகாப்புவேண்டும் என்றும் கருணாநிதி கேட்டது உண்மையா இல்லையா? அதனடிப்படையில் தான் இன்றும்ஸ்டாலினுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுக் கொண்டிருப்பது உண்மையா, இல்லையா?
7. எல்லாவற்றிற்கும்மேலாக போரை முடித்து வைக்கிறேன் என்று ஒரு மணி நேரம் உண்ணாவிரதம்இருந்ததைஉங்களால் மறைக்கவும்முடியாது. தமிழர்களால் மறக்கவும் முடியாது.
1980-களிலேயே மதுரைமாநாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு கூறியவர் அடல் பிகாரி வாஜ்பாய். பாஜகஆட்சியில் இலங்கைக்கு ஆயுதம் வழங்கவும்மாட்டோம், விற்கவும் மாட்டோம் என்ற கொள்கை முடிவெடுத்ததுபாஜக. எதிர்க்கட்சியாக இருக்கும் போது விடுதலை புலிகளையும், இலங்கை தமிழர்களையும் தூண்டிவிட்டு, ஆளும் கட்சியாக இருக்கும் போது பதவியை காப்பாற்றி கொள்வது திமுக என்பதை உலகறியும்.
இதனால் வரலாறு குறித்துதிமுக எங்களுக்கு பாடம் தேவையில்லை. உண்மையான வரலாறு குறித்த பாடத்தை பாஜக புகட்டும் எனவும் தமிழிசை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.






