மாணவனுடன் உல்லாசம் அனுபவித்த மனைவி!. இறுதியில் நேர்ந்த துயரம்!.

பெங்களூரில் இளைஞருடன் கள்ளக்காதல் ஏற்பட்ட பெண்ணுக்கு தடையாக இருந்த கணவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூரை சேர்ந்த 46 வயது நிரம்பிய அன்னபூர்னா எனும் பெண்ணும் இவரின் கணவர் சந்தோஷ் என்பவரும் அவர்களின் இரண்டு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர். சந்தோஷின் மனைவி அன்னபூர்னாவுக்கு பிரகாஷ் என்ற மாணவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது.

இந்த விஷயம் சந்தோஷிற்கு தெரியவந்த நிலையில் மனைவியுடன் தொடர்பை கைவிடுமாறு கூறி அடிக்கடி சண்டை போட்டுள்ளார். இதே போல் நேற்று இரவு சந்தோஷுக்கும், அன்னபூர்னாவுக்கும் சண்டை ஏற்பட்ட நிலையில் ஆத்திரமடைந்த அன்னபூர்னா கணவர் முகத்தில் ஸ்ப்ரே அடித்து தனியறையில் வைத்து பூட்டியுள்ளார்.

பின்னர் கள்ள காதலன் பிரகாஷுக்கு போன் செய்து அங்கு வரவழைத்து, இருவரும் சேர்ந்து சந்தோஷை கட்டையால் அடித்துள்ளனர். பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்தோஷ் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து பிரகாஷையும், அன்னபூர்னாவையும் கைது செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.