ஒல்லியான பெண்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி!.

பெண்கள் அனைவருமே விரும்புவது ஒல்லியான உடலமைப்பைதான். ஆனால் மாறாக தற்போது பெண்கள் பலருக்கும் எடை அதிகரிப்பு என்னும் பெரிய பிரச்சினை ஏற்படுகிறது. ஆனால் சில பெண்களுக்கு எப்பொழுதுமே எடை அதிகரிப்பதில்லை.

பெண்கள் ஒல்லியாக இருப்பது அவர்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்கலாம் ஆனால் அதன் பின்னால் இருக்கும் ஆபத்தை அவர்கள் உணருவதில்லை.

பெண்கள் அவர்களின் உயரத்திற்கு ஏற்ப சரியான எடையில் இருக்க வேண்டியது அவசியம், இல்லையெனில் பல ஆரோக்கியம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும்.

இது ஏற்பட பல காரணங்கள் உள்ளது. பெண்களின் உணவுப்பழக்கம், வாழ்க்கை முறை, அவர்கள் எடுத்துக்கொள்ளும் மருந்துகள் என பல காரணங்கள் உள்ளது. இங்கே குறைவான எடை உள்ள பெண்களுக்கு ஏற்படும் ஆரோக்கிய கேடுகளை பற்றி விரிவாக பார்க்கலாம்.

யாரெல்லாம் எடை குறைவாய் உள்ளவர்கள்?

பிஎம்ஐ 18.5 க்கு குறைவாக உள்ள பெண்கள் குறைவான எடையுள்ள பெண்களாக கருதப்படுகிறார்கள். பெண்களின் சராசரி உயரமான 5 அடி 4 அங்குலத்திற்கு பெண்கள் 48.5 கிலோ இருக்க வேண்டும்.

இதற்கு குறைவாக உள்ள பெண்களின் பிஎம்ஐ 18.4 ஆகும். பெண்களின் ஆரோக்கியமான எடை என்பது 49 கிலோவிலிருந்து 65 கிலோ வரை ஆகும்.

எடை குறைவு ஏற்பட காரணங்கள்

சில பெண்களின் உடலமைப்பே ஒல்லியானதாக இருக்கும். ஆனால் சில பெண்களுக்கு அவர்களின் ஆரோக்கிய பிரச்சினையால் உடல் இழப்பு ஏற்படலாம்.

தைராய்டு மற்றும் சர்க்கரை நோய் உள்ள பெண்களுக்கு உடல் எடை வேகமாக குறையும். ஹெப்பாடிட்டிஸ், COPD போன்ற நோய்களும் எடை இழப்பை ஏற்படுத்தும். உணவு குறைபாடுகள், அதிக உடற்பயிற்சி, சிலசமயம் மரபணுக்கள் கூட இந்த எடை இழப்பை ஏற்படுத்தும்.

எடை குறைவால் ஏற்படும் பிரச்சினைகள்

பெண்களின் ஆரோக்கியத்திற்கான அறிகுறியே சீரான மாதவிடாய்தான். எடை மிகக்குறைவாக இருப்பது சீரற்ற மாதவிடாய் அல்லது மாதவிடாய் முழுவதும் நின்றுவிட கூடிய ஆபத்தை ஏற்படுத்தும்.

உங்கள் உடலில் கொழுப்புகள் குறைந்து விட்டால் உங்கள் மாதவிடாய் ஏற்படுவதில் சிக்கல் ஏற்படும். குறிப்பாக நீங்கள் சாப்பிடாமல் இருந்தாலோ அல்லது அதிக உடற்பயிற்சி செய்தாலோ இந்த பிரச்சினை கண்டிப்பாக ஏற்படும்.

ஊட்டச்சத்து குறைபாடு

போதுமான அளவு ஊட்டச்சத்துக்களும், நீர்சத்துக்களும் கிடைக்காத போது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாகுதல், அனிமியா போன்ற மோசமான ஆரோக்கிய கேடுகளை ஏற்படுத்தக்கூடும். உங்கள் உடலில் போதுமான அளவு இரும்பு சத்துக்கள் இல்லாதபோது அனிமியா உண்டாகிறது. இதனால் சோர்வு, மயக்கம் பலவீனம் போன்ற குறைபாடுகள் ஏற்படும்.

இறப்பு

எடை குறைவாய் உள்ள பெண்களின் ஆயுட்காலம் எடை அதிகமான பெண்களை விட குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது. அதுமட்டுமின்றி இது பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.