வீடு கட்டும்முன் இதையெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் !

நீங்கள் புது வீடு கட்டுகிறீர்களா? வீடு கட்டும்முன் இதையெல்லாம் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம் !!

நீங்கள் புது வீடு கட்டுகிறீர்களா?. ஆனாலும் இடையிடையில் நிறைய சந்தேகங்கள் ஏற்படுகிறதா? எந்த வேலையை முதலில் செய்ய வேண்டும்? எந்த விஷயங்களை முதலில் கடைபிடிக்க வேண்டும்? அறிந்துகொள்வோம்.

1. உங்களுடைய இடம் திசைகாட்டிக்கு எவ்வாறு உள்ளது? உங்களுடைய இடம் சதுரம் அல்லது செவ்வகமாக உள்ளதா? உங்களுடைய இடம் ஒழுங்கில்லாமல் இருக்கும்போது சதுரம் அல்லது செவ்வகமாக மாற்றுவதற்கு வாய்ப்புள்ளதா? சரியான வரைபடம் உள்ளதா? என்று முன் கூட்டியே அனைத்தையும்

2. நீங்கள் கட்டக்கூடிய வீட்டிற்கு உண்டான தோராய மதிப்பீடு பற்றி முன்னதாக வைத்திருக்க வேண்டும்.

3. வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை விதிகளை கடைபிடித்து இருக்க வேண்டும்.

4. நீங்கள் வீடு கட்ட தொடங்கிய மாதத்திலிருந்து, வீட்டை முடிக்கக்கூடிய மாதங்கள் வரை இயற்கை உங்களுக்கு சாதகமாக இருக்குமா? என்ற விவரங்களை முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும். அதாவது மழைக்காலம், குளிர்காலம், வெயில்காலம் போன்ற விவரங்கள்.

5. பூமி பூஜை போடுவது, நிலை வைப்பது, ரூபிங் போடுவது, கிரகப்பிரவேசம் செய்வது போன்ற பல விஷயங்களை அனுபவம் உள்ளவர்களை வைத்து முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பிறகு வீட்டு வேலையை தொடங்க வேண்டும்.

6. உங்களுடைய வீட்டைக் கட்டத் தொடங்கியதும் எதை முதலில் கட்ட வேண்டும்? எதை இரண்டாவது கட்ட வேண்டும் என்கிற விவரங்களை முன்கூட்டியே தீர்மானிக்க வேண்டும். வரிசைப்படி கட்டும்போது பொருளாதாரம் மற்றும் நேரத்தை மீதம் செய்ய முடியும் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்து இருக்க வேண்டும்.