கோவிலில் சாமியே தேங்காய் உடைக்கும் வீடியோ!

கோவிலுக்கு செல்லும்போது அனைவரும் அர்ச்சனை செய்வதற்காக அர்ச்சனை தட்டு வாங்குவது வழக்கம் அதில் தேங்காய், வாழைப்பழம், பூ, சூடம் போன்ற பொருள்கள் இருக்கும்.

அதிலும் அர்ச்சனை செய்யும்போது அனைவருக்கும் ஒரு பதட்டம் இருக்கும், தேங்காய் கெட்டுப்போன தேங்காயாக இருக்க கூடாது எனவும், தேங்காய் கோணலாக உடையாமல் இருக்கவேண்டும் என்ற பதட்டம் இருக்கும். அவ்வாறு இருந்துவிட்டால் ஏதோ தெய்வ குற்றம் என எண்ணி பரிகாரமும் செய்வர்.

அனால் தற்பொழுது புதிய டெக்னலாஜியில் தேங்காயை சாமியே உடைப்பதற்கு ஏற்பாடு செய்துள்ளனர். கோவிலுக்கு வருபவர்கள் தேங்காயை சாமியின் வாயில் வைக்கின்றனர். அது அழகாக உடைக்கப்பட்டு ஒரு மூடி தேங்காய் மட்டும் சாமியின் கையில் வந்து கிடைக்கிறது.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி இதனால் பக்கதர்கள் விரைவில் தரிசனம் பெற்று செல்லும் சூழ்நிலை உருவாகிறது.