முகம் சுழிக்க வைக்கும் வீடியோ

ஸ்காட்லாந்தில் பேருந்து டிரைவர் ஒருவர் இளம் பெண்ணுக்கு பேருந்தில் இருந்த படி முத்தம் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

ஸ்காட்லாந்தின் Glasgow பகுதியில் இருக்கும் Sauchiehall வீதியிலே இந்த சம்பவம் நடந்துள்ளது. பேருந்தின் சீட்டில் அமர்ந்து கொண்டு, குறித்த பெண் பேருந்து ஓட்டுனருக்கு முத்தம் கொடுக்கிறார்.

அதன் பின் அவர் உன்னுடைய போன் நம்பர் கொடு என்கிறார். உடனே அந்த பெண் உங்களுடைய பேஸ்புக்கை சொல்லுங்கள், நான் அதில் எண்ணை அனுப்புகிறேன் சொல்ல, அவர் இல்லை என்றவுடன், உடனடியாக அவர் பேருந்தின் டிக்கெட்டில் நம்பரை எழுதி கொடுத்துள்ளார்.

அதன் பின் மீண்டும் அந்த பெண், டிரைவருக்கு முத்தம் கொடுத்துள்ளார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

அந்த பெண்ணின் வயது சுமார் 17 வயது இருக்கும் என்று கூறப்படுகிறது. அதைத் தவிர அந்த பெண்ணைப் பற்றியோ டிரைவரைப் பற்றியோ எந்த ஒரு தகவலும் இல்லை.

இது குறித்து அங்கிருக்கும் அதிகாரி, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக கூறியுள்ளார்.

மேலும் கடந்த 2015-ஆம் ஆண்டு Falkirk பகுதியில் இளம் பெண் ஒருவரிடம் பேருந்து ஓட்டுனர் Hugh McQuade என்பவர் மிகவும் தவறாக நடந்து கொண்டார். தான் சொன்னபடி கேட்கவில்லை என்றால் கடத்திச் சென்றுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

அதன் பின் இந்த விவகாரம் பொலிசாருக்கு தெரியவர தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.