இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி காலமானார்

சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி என்ற பெருமைக்குரிய அன்னா ராஜம் மல்ஹோத்ரா மும்பையில் காலமானார். அவருக்கு வயது 91.

கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே நிராணம் என்ற சிற்றூரில் 1927 ஜூலை 17 அன்று அன்னா ராஜம் பிறந்தார். இவரது தந்தை ஒட்டவேலை ஓ. ஏ. ஜார்ஜ். தாயாரா, அன்னா பால்.

கேரளா கோழிக்கோட்டில் வளர்ந்த அவர் புரொவிடன்ஸ் மகளிர் கல்லூரி மற்றும் கோழிக்கோட்டிலுள்ள மலபார் கிறிஸ்துவ கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். பிறகு அவரது குடும்பம் சென்னைக்கு குடிபெயர்ந்தது. 1949 இல் சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் தனது முதுநிலைப் படிப்பை முடித்தார். 1950 இல் இந்திய ஆட்சிப்பணி தேரவ்வில் வெற்றிபெற்று பயிற்சியை நிறைவு செய்தார். தமிழ்நாடு பிரிவில் இருந்து ஐ.ஏ.எஸ் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர் 1951 ஆண்டைய பயிற்சிக் குழுவைச் சேர்ந்த இவர், தன் சக ஆட்சிப்பணி அதிகாராயான ஆர். என். மல்ஹோத்ராவை திருமணம் செய்துகொண்டார்.

அவர் முதலில் பணிபுரிந்த மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டில் ராஜாஜி முதல்வராக இருந்தபோது, , அன்றைய திருப்பத்தூர் மாவட்ட துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். 1989 ஆம் ஆண்டில் அவருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது.

இவர் பிரபல மலையாள எழுத்தாளரான பைலோ பாலின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.