கடந்த சில நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தில் ஒரு பியூட்டி பார்லர் கடையின் உள்நுழைந்து திமுக முன்னாள் கவுன்சிலர் ஒருவர் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரம்பலூர் மாவட்டம் வெங்கடேசபுரத்தில் சத்யா என்பவர் பல ஆண்டுகளாக பெண்கள் அழகு நிலையம் நடத்தி வருகிறார். அந்த அழகு நிலையத்தில் நுழைந்த திமுக முன்னாள் கவுன்சிலர் செல்வகுமார், சரமாரியாக சத்யாவை தாக்குகிறார்.
மேலும், அவரின் கழுத்தை பிடித்து கீழே தள்ளி தனது கால்களால் உதைக்க வலி தாங்கமுடியாத சத்யா கத்துகிறார். ஒரு பெண் என்று கூட பார்க்காமல் ஈவு இரக்கமின்றி சரமாரியாக திமுக கவுன்சிலர் செல்வகுமார் தனது காலால் சந்தியாவின் வயிற்றில் எட்டி உதைத்து தாக்கும் காணொளி தற்போது கடும் விமர்சனங்களை சமூக வலைத்தளங்களில் ஏற்படுத்தியுள்ளது.
ஒரு பெண் என்றுகூட பார்க்காமல் காலால் எட்டி உதைத்து திமுக கவுன்சிலர் செல்வகுமார் நடந்து கொண்ட இந்த விடயம் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.

இதனிடையே அவரை போலீசார் கைது செய்தார்கள். மேலும் பியூட்டி பார்லர் பெண்ணை தாக்கிய திமுக பிரமுகர் செல்வகுமார் கட்சியில் இருந்து தற்காலிக நீக்கம் என திமுக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனை தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பியூட்டி பார்லர் நடந்த தாக்குதலுக்கு பின்னால் பெண்ணாசை இருப்பதாக கூறப்படுகிறது.
பியூட்டி பார்லர் நிறுவனரான சத்யாவிற்கும், செல்வகுமாருக்கும் இடையே நெடுநாட்களாக பழக்கம் இருந்துள்ளது. ஆனால் சத்யா ஏற்கனவே திருமணமானவர்.
கடையை விரிவு படுத்த செல்வகுமாரிடம் 25 லட்சம் ரூபாய் பணம் வாங்கியிருக்கிறார் சத்யா. பணத்தை வாங்கிவிட்டு செல்வகுமாருடனான நட்பை குறைத்துக்கொண்டு, அடுத்த அரசியல் புள்ளியை நோக்கி குறி வைத்துள்ளார்.
சத்யாவின் பழக்கம் கைமீறி போகவே, கொடுத்த பணத்தையாவது வாங்கிக்கொண்டு அவரை விட்டு விலகி விடலாம் என்று திருப்பி கேட்க சென்றுள்ளார் செல்வகுமார்.
அப்போது தான் பணமே வாங்கவில்லை என்று சத்யா காரியம் சாதித்துள்ளார். இதனை தொடர்ந்தே தாக்குதல் இடம்பெற்றிருக்கிறது.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவத்தின் காட்சிகள் இப்போது வெளியாக வேண்டிய அவசியம் என்ன..? இதனால் திமுகவில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.






