“நேரில் சந்திக்க தயாராக இருந்தேன் – பிரபாகரன் இணங்கவில்லை”

விடுதலை புலிகளின் தலைவரை கிளிநொச்சிக்கு சென்று சந்திப்பதற்கு தான் தயாராக இருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் டில்லியில் இடம்பெற்ற நேர்காணல் ஒன்றின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் ஆட்சிக்கு வந்த காலத்தில் விடுதலை புலிகளின் தலைவர் வேலுபிள்ளை பிரபாகரனுக்கு சமாதானத் தூதுவர்களை அனுப்பியிருந்தேன்.

அத்துடன் விடுதலை புலிகளின் தலைவர் கொழும்பிற்கு வரவேண்டிய அவசியமில்லை என்றும் நானே கிளிநொச்சிக்கு வந்து அவரை சந்திப்பதற்கு தயாராக இருப்பதாக தெரிவித்திருந்த போதிலும் அதற்கு அவர் இணக்கம் தெரிவிக்கவில்லை  என்றார்.