விஜய்க்கு இப்படியொரு மாஸா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்துடன் வலம் வருபவர் தளபதி விஜய். தமிழகத்தை தாண்டி உலகம் முழுவதும் நிறைய ரசிகர்கள் உள்ளார்கள். குறிப்பாக கேரளா தளபதியின் கோட்டையாகவே இருந்து வருகிறது.

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அவதிப்பட்டு வந்த மக்களுக்காக ரூ 70 லட்சம் நிதி அளித்து அனைத்து தரப்பு மக்களிடமும் அளவில்லாத அன்புக்கு சொந்தக்காரரானார்.

இந்நிலையில் தற்போது கேரளாவில் ஒரு பகுதிக்கு இளைய தளபதி நகர் என பெயர் வைத்துள்ளார், இதற்கான பெயர் பலகை இணையத்தில் வைரலாகி வருகிறது.