குருநாகல் மாவட்டம் மடாடுகம – ஹெவென்தென்னேகம பிரதேசத்தில் உள்ள விவசாயக் கிணறு ஒன்றில் இருந்து முதலையொன்றும், 12 குட்டிகளும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
விவசாய நிலத்திற்கு நீர் பாய்ச்சுவதற்காக அமைக்கப்பட்ட கிணற்றிலிருந்தே இவை மீட்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறித்த விவசாயக் கிணற்றிலிருந்து நீர் இறைப்பதற்காக கிணற்றை எட்டிப் பார்த்தபோது அதனுள் முதலைக் குட்டிகளும் பெரிய முதலையொன்றும் இருந்துள்ளன.
இதுகுறித்து உடனடியாக கல்கிரியாகம வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து அவர்களால் குறித்த முதலைகள் பத்திரமாக மீட்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இவ்வாறு மீட்கப்பட்டுள்ள முதலை மற்றும் குட்டிகளை அவற்றுக்குப் பொருத்தமான சரணாலயத்தில் பாதுகாப்பாக விடுவிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்கிரியாகம வன விலங்கு அதிகாரிகள் எமது செய்திச் சேவையிடம் கூறினர்.