நடிகை நயன்தாராவின் செயலால் குவிந்துவரும் புகழாரம்!.

தமிழக இளைஞர்களை கவர்ந்த நடிகை நயன்தாரா. ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார். அவரின் இரண்டாவது படத்திலேயே ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு நயன்தாராவுக்கு கிடைத்தது.

2015ம் ஆண்டு தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட இவரது திரைப்படங்கள் அனைத்தும் வெற்றி பெற்றதால் பல பத்திரிகைகள் நயன்தாராவை  லேடி சூப்பர் ஸ்டார் என புகழாரம் சூட்டினர். தற்போது தமிழ் சினிமாவின் நம்பர் 1 நடிகையாக வலம் வருகிறார் நயன்தாரா. அண்மையில் வெளியான கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள் வெற்றி படங்களாக அமைந்தன. தற்போது அந்த படங்கள் விறுவிறுப்பாகவும் ஓடிவருகிறது.

இமைக்கா நொடிகள் பட வெளியீட்டின் போது, அப்பட தயாரிப்பாளருக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அந்த தருணத்தில் நயன்தாராவுக்கு ரூ. 50 லட்சம் சம்பள பாக்கி நிலுவையில் இருந்திருக்கிறது என கூறப்படுகிறது.

இதனையடுத்து நடிகை நயன்தாரா நினைத்திருந்தால், படம் வெளியாகும் முன்னரே சம்பளப் பணம் கொடுக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி இருக்கலாம். ஆனால் தயாரிப்பாளரின் நிலைமையை  கருத்தில்கொண்டு அதை பற்றி எதையும் கேட்கவில்லையாம். இந்த விஷயம் தற்போது அனைவராலும் புகழப்பட்டு வருகிறது.