ஸ்டாலினிடம் இருந்து வந்த உத்தரவு..? மொத்த கட்சியும் ‘கப் சிப்’..!

நேற்று பேரணி எதிர்பார்த்தபடி வெற்றியடையாத காரணத்தினால் மிகுந்த விரக்தியில் இருக்கிறார் அழகிரி.

பார்த்து பார்த்து அத்தனையும் செய்து கடைசியில் காலை வாரி விட்டார்களே என்று புலம்பி வருகிறார்.

ஏற்கனவே கட்சியில் தனக்கான அங்கீகாரம் இல்லாமல் தவித்து வரும் நிலையில், இந்த தோல்வி தனது அரசியல் பயணத்திற்கு முட்டுக்கட்டையாக இருக்கும் என்று நினைத்து ஆதரவாளர்களிடம் புலம்பியதாக கூறப்படுகிறது.

நேற்று எதிர்பார்த்த படி எதுவுமே நடக்காத காரணத்தினால் கோபத்தில், கூட்டத்தில் ஆதரவாளர்களை அழகிரி அடிக்கும் காட்சிகளும் வெளியானது.

பேரணி முடியும் தருணத்தில், அறிவாலயத்துக்குக் கெடு விதிக்கும் வகையில் பேசுவதற்கு அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால் கூட்டம் கூடாததால், ‘எதுவும் பேச வேண்டாம்’ என்ற முடிவுக்கு வந்துவிட்டார். பேரணி ஏற்பாடுகளில் இன்னும் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம்.

சொல்லப் போனால், ‘ஒரு லட்சம் பேருக்கும் மேல் திரள்வார்கள்’ எனக்கூறி அழகிரியை ஏமாற்றிவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த பேரணியை தொடர்ந்து அழகிரி குறித்து திமுக நிர்வாகிகள் யாரும் எதுவும் பேசக்கூடாது என்று ஸ்டாலினிடத்தில் இருந்து உத்தரவு பறந்திருக்கிறது.

இதனால் தான் துரைமுருகனிடம் அழகிரி குறித்து கேள்வி கேட்ட பொழுது ‘நோ கமென்ட்ஸ்’ என்று கூறிவிட்டு எழுந்து சென்றுள்ளார்.

இனி தொலைக்காட்சி விவாதங்கள் உட்பட எதற்கு அழைத்தாலும் திமுக நிர்வாகிகள் சிறிது காலத்திற்கு தலைகாட்ட கூடாது என்றும், குறிப்பாக அழகிரி குறித்து வாய் திறக்க கூடாது என்ற உத்தரவு அடிமட்ட தொண்டன் வரை கொண்டு சேர்க்கப்பட்டுள்ளது.