நெல்லையில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் சென்ற தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் தமிழிசையை விமானத்தில் வைத்து அவருக்கு எதிராக பாசிச பாஜக ஆட்சி ஒழிக என்று சோபியா என்ற பெண்மணி கோஷமிட்டார். இதனையடுத்து சோபியா மீது நடவடிக்கை எடுக்க கோரி விமான நிலைய போலீசாரிடம் பாஜக தலைவர் தமிழிசைசவுந்தராஜன் மனு அளித்ததை தொடர்ந்து, சோபியாவை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியதாவது:
தனக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆராய்ச்சி மாணவி சோபியாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கைதுவரை எடுத்து சென்றது தமிழிசையின் முதிர்ச்சி அற்றநிலையை காட்டுவதாக இருக்கிறது. மத்தியில் நம்முடைய ஆட்சி நடக்கிறது என்ற அதிகார மமதையில் தமிழிசை செயல்பட்டுகிறார் என தினகரன் விமர்சித்துள்ளார்.