விஜய்யுடன் மோதும் விஜய் ஆண்டனி….

விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் படத்தில் நடித்து வருகிறார். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கு இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரவுள்ளது.

இந்நிலையில் விஜய் படத்துடன் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் சூர்யாவின் என்ஜிகே உள்ளிட்ட படங்கள் ரிலீஸாகும் என கூறப்பட்ட நிலையில், அந்த படங்களின் ரிலீஸ் தேதியை தள்ளிவைத்தது. இதனையடுத்து சர்கார் படம் சோலோவாக ரிலீஸாகும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகி வரும் திமிரு புடிச்சவன் படம் விஜய் படத்துடன் ரிலீஸாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.