சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் முழுவதும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலத்த பாதிப்புகளை சந்தித்து வந்தது. நிறைய பொருட்சேதங்களும், உயிர் சேதங்களும் ஏற்பட்டன.
இந்நிலையில் பல மாநிலங்கள் முன் வந்து கேரளாவிற்கு உதவி செய்து வந்தன. அதில் தமிழகத்தில் இருந்து கேரளா மாநிலத்துக்கு உதவிகளை அதிகமாக செய்து வந்தார்கள்.
இதனால் கேரளா மாநிலத்தில் இளைஞர் ஒருவர் சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் ”தமிழர்களுக்கு மிகப் பெரிய நன்றி உங்களுக்கு எந்த பிரச்சினை என்றாலும் நாங்களும் ஓடி வருவோம்” என்று பதிவிட்டு நன்றியை தெரிவித்துருந்தார்.
சிறிது நாட்களுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் கேரள வாலிபர்கள் சிலர் தமிழர்களையும், தமிழ்நாட்டையும் தவறாக பேசி ”தமிழா உனக்கு எங்கள் மலையாளி பெண் வேண்டுமா? என்று அவதூறாக பேசினார்கள்”. இதனால் தமிழகத்தில் உள்ளவர்களும் சிலர் அவர்களை கண்டிக்கும் விதமாக ”உங்கள் மலையாள பெண்களை எங்கள் தமிழர்களுக்கு நீங்கள் ஏன்? கட்டிகொடுத்தீர்கள்” என்று பேசி காணொளியை பதிவிட்டார்கள். இப்படி இருக்கையில் பிரச்சினை தீர்வு காண கேரளா வாலிபர் ஒருவர் தன் கருத்தை பகிர்ந்தார்.
அதில் கேரளா வாலிபர் ”தமிழர்கள் நீங்கள் எங்களுக்கு பல எண்ணற்ற உதவிகளை செய்துள்ளீர்கள் அதற்கு மிகப் பெரிய நன்றி சொன்னாலும் போதாது என்றும், மேலும் சில நாட்களுக்கு முன் இங்கு இருந்த சில பசங்க உங்களை திட்டி அதை பதிவிட்டுருந்தார்கள்.
அவர்கள் சார்பாக நான் உங்களிடம் மன்னிப்பு கேட்டுகிறேன் என்றும், அவர்களை கிணற்றில் இருக்கும் தவளை போல் அவர்கள் நான் தான் ராஜா என்று நினைத்து கொண்டு இப்படி செய்துள்ளார்கள். மேலும் அவர்களுக்கு தெரியாது நமது ஒற்றுமை பாசம் என்றும் கூறி மன்னிப்பு கேட்டார்”.
குறித்த காணொளியில் இவர் மன்னிப்பு கேட்டு அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த காணொளி மிகவும் வேகமாக பரவி வருகிறது.






