அடேங்கப்பா, சூர்யாவின் மகளா இது , வைரலாகும் வீடியோவால் வாயடைத்து போன ரசிகர்கள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK படத்தில் நடித்து வருகிறார். இவர் பிரபலமான நடிகை ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.இவர்களுக்கு தியா, தேவ் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.

மேலும் இவர்கள் பலருக்கும் பிடித்த முன்னணி காதல் ஜோடியாக வாழ்ந்து வருகிறார்கள்.

சூர்யாவின் மகள் தியா பள்ளியில் படித்து வருகிறார்.அவர் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளார் . மேலும் இதனால் டென்னிஸ், கால்பந்து என பலவற்றிலும் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் அவருக்கு கிரிக்கெட் மீதும் தீராத ஆர்வம் ஏற்பட்டு இதற்காக பிரபலமான பயிற்சியாளரிடம் முறையாக கிரிக்கெட் கற்று வருகிறார்.

மேலும் மாநில அளவிலான ஜூனியர் போட்டிகளில் பங்கேற்ற அவர் இந்திய பெண்கள் கிரிக்கெட் கேப்டன் மிதாலியின் கையால் கோப்பையும் பெற்றுள்ளார்.

இந்நிலையில் தியாவின் பயிற்சி பெரும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதனை கண்டரசிகர்கள் அனைவரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.