நடிகை நயன்தாராவுக்கு கிடைக்கும் பாராட்டுக்கள்!. ட்ரெண்டிங்கில் வரும் புதிய படம்!

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. தமிழகத்தில் நடிகை நயன்தாராவுக்கு என்று பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் கோலமாவு கோகிலா வெற்றியை தொடர்ந்து இமைக்கா நொடிகள் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த படத்தில் நடிகை நயன்தாராவின் நடிப்பு ரசிகர்களிடையே பெரிதும் பேசப்பட்டு வருகிறது. தற்போது கூகுளில் கடந்த வாரம் அதிகம் ட்ரெண்டிங்கில் உள்ள படம் எது என்ற தகவல் வெளி வந்துள்ளது.

இதில் நயன்தாராவின் “இமைக்கா நொடிகள்” ட்ரெண்டிங்கில் இருந்ததால், ரசிகர்கள் இந்த விஷயத்தை சமூகவலைத்தளங்களில் பரப்பிவருகின்றனர்.

இதனால் நடிகை நயன்தாராவுக்கு பட வாய்ப்பு அதிக அளவில் வரும் என சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர்.