நரை முடி பிரச்சனை ஏற்படுவதற்கு காரணங்கள் பல உள்ளது. அதிலும் குறிப்பாக உணவு பழக்கங்கள், பரம்பரை ரீதியாக பாதிப்பு, மது பழக்கம், தேவையற்ற டைகளை பயன்படுத்துதல் இவையே அதிக அளவிலான காரணங்களாக இருக்க கூடும்.
இதனை சரி செய்ய பல இயற்கை சார்ந்த வழி முறைகள் உள்ளது. அதிலும் நமது முன்னோர்கள் பயன்படுத்திய சில அற்புத மூலிகைகள் நரை முடி பிரச்சனையை எளிதாக சரி செய்கிறது.
அவை என்னென்ன மூலிகைகள் என்று இப்போது தெரிந்து கொள்வோம்.
கருப்பு எள்ளு
இது முடிகளின் போஷாக்கை அதிகரிக்க உதவும் மருத்துவ குணம் கொண்ட ஒன்று. கருப்பு எள்ளு சாப்பிடுவதால் முடியின் அடி வேர் உறுதியாக இருக்கும். மேலும் இளநரைகளை வரவிடாமல் பாதுகாக்கும்.
மேலும் மெலனின் நிறமியை அதிகம் சுரக்க செய்யும். இதனால் முடி எப்போதும் கருமையாகவே இருக்கும். உங்கள் முடியின் வளர்ச்சியை அதிகரித்து, நரைகளை போக்க வேண்டுமென்றால் இந்த கருப்பு எள்ளை வாரத்துக்கு 2 நல்லது 3 முறை சாப்பிடுங்கள்.
கோதுமை புல் சாறு
கோதுமை புல்லில் வைட்டமின் எ,பி,சி,இ போன்றவை அதிக அளவில் இருக்கிறது. இவை முடியின் கருமை தன்மையை பாதுகாக்கிறது. அத்துடன் இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ், அமினோ அசீட்ஸ், ஐயோடின் ஆகிய மூல பொருட்கள் முடியை வெள்ளையாக மாற்றும் ஹைட்ரஜன் பேரொக்ஸிட்-டை நீக்கும்.
இந்த சாற்றை குடித்து வந்தால் நரைமுடியை தடுப்பதோடு முக சுருக்கங்கள், கரும்புள்ளிகள் முதலிய பிரச்சனைகளுக்கும் தீர்வாக இருக்கும்.
நெல்லிக்காய்
வைட்டமின் சி அதிகம் நிறைந்த நெல்லி, தலை முடி வெள்ளை ஆவதை முற்றிலுமாக தடுக்கும். இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்ஸ் இளநரையை தடுத்து உங்கள் முடிகளை புத்துயிர் பெற செய்கிறது. உடல் உஷ்ணமும் நரை முடிக்கு ஒரு முக்கிய காரணம்.
நெல்லிக்காய் உடல் சூட்டை குறைத்து சீரான தட்பவெப்பத்தை உடலுக்கு தருகிறது. மேலும் முடி கருகருவென வளரவும், அடர்த்தி அதிகரிக்கவும் நெல்லி பயன்படுகிறது. நெல்லி சாற்றை தினமும் குடித்து வந்தால் நோயற்ற வாழ்வை வாழலாம்.






