பாலாஜி முதல் மனைவிக்கும் மகனுக்கும் செய்த துரோகம்..

தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களிலும் விஜய் டிவியில் தொகுப்பாளராகவும் இருந்து பிரபலமானவர் பாலாஜி. இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.

நிகழ்ச்சியில் பாலாஜியின் மனைவியான நித்யாவும் கலந்து கொண்டு சில வாரங்களுக்கு முன்பு வெளியேறினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய நித்யா பாலாஜியை பற்றி பேட்டி ஒன்றில் பல திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.

பாலாஜிக்கு முதல் மனைவி ஒருவர் இருக்கிறார். தருண் என்ற மகனும் இருக்கிறார். ஆனால் பாலாஜி பிக் பாஸ் வீட்டில் வெறும் போஷிகாவின் பெயரை மட்டுமே கூறி அனுதாபங்களை பெற்று வருகிறார். இதுவரை தருணை பற்றி அவர் பேசவேயில்லை.

அவருடைய முதல் மனைவி மற்றும் மகனுக்கும் ஆசைகள் இருக்கும் அல்லவா.. அவருடைய மகன் தருணை பற்றியும் பேசலாமே என கூறியுள்ளார்.