இவ்வளவு ஆபத்து உள்ளதா பப்பாளி பழத்தில்?

ஒவ்வொரு வகையான பழத்திலும் பலவிதமான மருத்துவ நன்மைகள் நிறைந்துள்ளது என்பதை நாம் அனைவருமே அறிந்த ஒரு விஷயமாகும்.

அப்படி இருக்கும் ஒருசில பழங்களை அன்றாடம் நாம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு வந்தால், அதுவே நமக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.

அந்த வகையில் பப்பாளி பழத்தைக் அதிக அளவு உண்பதால் உண்டாகும் தீமைகளை பற்றி பார்ப்போம்.

பப்பாளி பழத்தை அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
  • பப்பாளிப் பழத்தில் கரோட்டீன்கள் நிறைந்துள்ளது, இதனை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது சரும பிரச்சனையான Carotenemia-வை ஏற்படுத்துகிறது.
  • பப்பாளியில் அதிகளவு உள்ள Papain என்சைம் உடலுக்கு சென்றால் தொண்டை வீக்கம், சளி, காய்ச்சல், நெஞ்செரிச்சல், ஆஸ்துமா, ஒவ்வாமை மற்றும் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.
  • கர்ப்பிணி பெண்கள் முதல் 2 மாதங்கள் இப்பழத்தை உண்ணாமல் இருப்பது நல்லது. அதிகம் பழுக்காத பப்பாளியின் பால் கருக்கலைப்புக்கு வழிவகுக்கும்.
  • பப்பாளி காயை அதிகம் உட்கொண்டால் வயிற்று போக்கு அல்லது வயிற்று வலி ஏற்படலாம்.
  • பப்பாளி விதையிலுள்ள”கார்பைன்” என்ற நச்சானது, நாடித்துடிப்பை குறைப்பதோடு, நரம்பு மண்டலத்தில் அழுத்தத்தைஏற்படுத்துகிறது
  • பப்பாளி பழத்தில் விட்டமின் சி நிறைந்துள்ளது, உயர் ரத்த அழுத்தம், புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி ஆக்சிடன்டாக விட்டமின் சி திகழ்கிறது, எனினும் விட்டமின் சி-யை குழந்தைகள் ஒருநாளைக்கு 1200 மில்லிகிராமுக்கு அதிகமாகவும், பெரியவர்கள் 2000 மில்லிகிராமுக்கு அதிகமாகவும் எடுத்துக் கொள்ளும் போது சிறுநீரக கல் உருவாக்கத்தை தூண்டுகிறது.
  • அளவுக்கு அதிகமாக பப்பாளியை சாப்பிடும் போது இரைப்பை மற்றும் குடல் பிரச்சனைகளை ஏற்படுத்தி, வயிற்றில் ஒருவித எரிச்சல் மற்றும் செரிமான பிரச்சனையை உண்டாக்குகிறது.
யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது
  • பச்சை பப்பாளியில் லாடெக்ஸ் என்னும் கருப்பையை சுருக்கும் உட்பொருள் உள்ளது. ஆகவே கர்ப்ப காலத்தில் இந்த பழத்தை சாப்பிடுவதை அறவே தவிர்க்க வேண்டும்.
  • பப்பாளியில் உள்ள பாப்பைன் என்னும் நொதிப் பொருள், சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும் எனவே ஆஸ்துமா உள்ளவர்கள் இந்த பழத்தை சாப்பிடாமல் இருப்பது நல்லது.
  • பப்பாளியை அதிகளவில் உட்கொண்டால் விந்தணுவின் எண்ணிக்கையைக் குறைக்கும். ஆகவே தந்தையாக நினைக்கும் ஆண்கள், பப்பாளி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
  • இரைப்பை குடல் பிரச்சனை உள்ளவர்கள், இப்பழத்தை தவிர்ப்பதோடு, மற்றவர்கள் அளவாக சாப்பிடுவதே நல்லது.
  • குறைவான இரத்த சர்க்கரை உள்ளவர்கள் உட்கொள்வது மிகவும் ஆபத்தானது.