14 வயதில் ஆரம்பித்த அரசியல்….. ஸ்டாலின் கடந்து வந்த பாதை

திமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் அக்கட்சியின் செயல் தலைவராக இருந்து வந்த ஸ்டாலின் திமுகவின் தலைவராக பொறுப்பேற்கவிருக்கிறார்.

திமுகவின் தலைவர் ஸ்டாலின் என்ற அறிவிப்பு நாளை வெளியாகவிருக்கிறது.

இந்நிலையில் அவர் கடந்து வந்த பாதை குறித்து பார்ப்போம்,

  • 1967ல் திமுக முதன்முதலாக ஆட்சியை பிடித்த தேர்தலின் போது 14 வயதில் மு.க.ஸ்டாலின் பிரச்சார களத்தில் இறங்கினார்.
  • 1968ம் ஆண்டு பள்ளியில் படிக்கும் போது கோபாலபுரத்தில் இளைஞர் திமுகவை உருவாக்கினார்.
  • 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் சென்னையில் நெடுஞ்சாலையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில் முதன்முதலாக உரையாற்றினார்.
  • 1970ம் ஆண்டு மார்ச் மாதம் முரசே முழங்கு என்ற நாடகத்தில் நடித்தார்.
  • 1973ல் திண்டுக்கல் தீர்ப்பு என்ற நாடகத்தில் நடித்தார்.
  • 1974ல் புதுக்கோட்டை மாவட்ட திமுகவின் தேர்தலை தேர்தல் ஆணையாளராக நடத்தி வைத்தார்.
  • 1976ம் ஆண்டு திருமணமான அடுத்த ஆண்டிலேயே மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
  • 1977ல் பதினொரு மாதங்கள் கழித்து சென்னை மத்தியச் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.
  • 1980ல் திருச்சி மூதூரில் திமுக இளைஞரணி உருவாக்கப்பட்ட போது அதன் அமைப்புக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்.
  • 1981ம் ஆண்டு கைலாசம் விசாரணைக் கமிஷனின் சட்ட நகலை எரித்ததால் கைதாகி 38 நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்.
  • 1982ம் ஆண்டு திமுக இளைஞரணியின் அமைப்புக்குழு உறுப்பினரானார்.
  • 1983ம் ஆண்டு திமுக இளைஞரணி அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார் மு.க.ஸ்டாலின்.
  • 1983ம் ஆண்டு அதே ஆண்டில் திமுக இளைஞர் அணிச்செயலாளராக நியமிக்கப்பட்டார்.
  • 1984ல் முதன் முறையாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டுபோது தோல்வியைத் தழுவினார்.
  • 1988ல் ஒரே ரத்தம் என்ற திரைப்படத்தில் நடித்தார் மு.க.ஸ்டாலின்.
  • 1989ம் ஆண்டு தோல்வியுற்ற அதே ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
  • 1991ம் ஆண்டு மூன்றாவது முறையாக ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்ட போது தோல்வி அடைந்தார்.
  • 1993ம் ஆண்டு இளைய சூரியன் என்ற தமிழ் வார இதழைத் தொடங்கி ஆசிரியராக பணியாற்றினார்.
  • 1996, 2001, 2006 ஆகிய ஆண்டுகளில் ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தொடர்ந்து 3 முறை வெற்றி பெற்றார்.
  • 1996ல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மாநகர மேயராக பணியாற்றினார்.
  • 2002ல் அதிமுக ஆட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்ற சட்டம் அமலானதை தொடர்ந்து மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.
  • 2003ல் திமுகவின் துணைப்பொதுச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்டார்.
  • 2006ல் உள்ளாட்சி மற்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
  • 2008ம் ஆண்டு திமுக பொருளாளராக தேர்வு செய்யப்பட்டார்.
  • 2011,2016ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
  • 2009-2011வரை தமிழகத்தின் துணை முதல்வராக பணியாற்றினார்.
  • 2015 ம் ஆண்டு ‘நமக்கு நாமே’ சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு 234 சட்டமன்ற தொகுதிகளிலும் பரப்புரை செய்தார்.
  • 2017ம் ஆண்டு திமுக செயல்தலைவராக மு.க.ஸ்டாலின் நியமிக்கப்பட்டார்.
  • 2018ம் ஆண்டு திமுக தலைவர் கருணாநிதி மறைவுக்குப் பின் தலைவராக ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார் மு.க.ஸ்டாலின்.